நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியக்குடி ஊராட்சி மேல விடங்களூர் குளம் தூர்வாரக் கோரியும் தடுப்பு சுவர் கட்டி தர கோரியும் மாபெரும் சாலை மறியல் சாட்டியக்குடி சி கிளை செயலாளர் தோழர் ஆர்.குமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
மறியலில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ப சுபாஷ் சந்திரபோஸ் ஒன்றிய செயலாளர் ஆர் முத்தையன் மாவட்ட குழு உறுப்பினர் எம் என் அம்பிகாபதி ஒன்றிய குழு உறுப்பினர்கள் சண்முகம் டி ஜெயராமன் ஜி அறிவழகன் மாதர் சங்கம் ஒன்றிய செயலாளர் தோழர்வி.அருள்மொழி மற்றும் கிளை செயலாளர்கள் பொதுமக்கள் 100 மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடனடியாக குளத்தை தூர்வார அனுமதி வழங்கியதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கபட்டது.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்



0 Comments