நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது.வேதாரண்யம் பேருந்துநிலையத்தில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி தொடங்கி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலை துறை சாலை பாதுகாப்பு அலகு கோட்ட பொறியாளர் செந்தமிழ்செல்வன் கொடி அசைத்து துவக்கி வகித்தார். பேரணியில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் , பள்ளி மாணவர்கள் பேரணியில் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி வழிநெடுகிலும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் மற்றும் சாலை பாது காப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் குறித்து மாணவர்கள் முழக்கங்களை எழுப்பி பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
நாகை மாவட்ட செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி

0 Comments