ஓபிஎஸ் அத்தியாயம் முடிந்துவிட்டது...... புதிய கட்சியை தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்

 


மூத்த அரசியல் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆர் அண்ணா திமுக என்ற கட்சியை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளார்.

எம்ஜிஆர் காலத்து அரசியல் தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன் பாமக, தேமுதிக, அதிமுக.. தனிக்கட்சி என பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்தவர்.அண்மையில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து பண்ருட்டி ராமச்சந்திரன் செயல்பட்டார். இந்நிலையில் எம்ஜிஆர் அண்ணா திமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கியிருப்பதாக பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது: எங்கள் வழி தனி வழி.. கூட்டணி என்ற பேச்சுக்கு இடம் இல்லை.எம்ஜிஆர் அண்ணா திமுக தேர்தலில் போட்டியிடாது. அதேநேரத்தில் இந்த கட்சியில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பினால் சுயேட்சையாக போட்டியிடுவார்கள்.

அரசியல் என்பது ஒருவருக்கானது அல்ல. அரசியல் என்பது மக்களுக்கானது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அத்தியாயம் என்பது முடிந்துவிட்டது. இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

Post a Comment

0 Comments