நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஸ்ரீதேவி பூதேவி, பத்மாவதி தாயார் வரத ஆஞ்சநேயர் சமேத வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோ பூஜை, அஸ்வ பூஜை, விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, மகா பூர்ணஹூதி, மகா தீபாரதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து கடம் புறப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க விமான கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்குவளை நிருபர் த.கண்ணன்


0 Comments