பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

 


பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமீபத்தில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே மயங்கிய நிலையில் அவரை மீட்டு, முதலில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எச். ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை முன்னேறி வருவதாகவும், அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச். ராஜாவை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு எம்.பி. உடனிருந்தார்.

இதைத் தொடர்ந்து, எச். ராஜாவின் எக்ஸ் பதிவில், அவரது குடும்பத்தினர் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். எக்ஸ் பதிவில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் T.R.பாலு MP ஆகியேர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் H.ராஜாவை இரவு 7.50 மணிக்கு நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

H.ராஜா விரைவில் பூரண குணமடைந்து நலமோடு மக்கள் பணியாற்ற தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments