பொன்னேரி கிரிமினல் அட்வகேட் பார் அசோசியேஷன் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது


திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் பொன்னேரி கிரிமினல் அட்வகேட் பார் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.  மூத்த வழக்கறிஞர்கள் மோகன்,ராதா மணவாளன்,பொன்னுதுரை,ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் சங்க தலைவர் வழக்கறிஞர் பெரவள்ளூர் செ.ராஜா தலைமையில் செயலாளர் வழக்கறிஞர் விஜய் கூட்டத்தை வழி நடத்தினார்.

பொருளாளர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு,சங்க கௌரவ தலைவர் வழக்கறிஞர் மகேந்தர்ராஜ்,சங்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டி.காந்தி,துணைத் தலைவர்கள் வழக்கறிஞர்கள் சக்கரபாணி,சைமன்,துணை செயலாளர்கள் வழக்கறிஞர்கள் கார்த்திக்,ஆர்மி வெற்றி,பிரகாஷ்,பிரபு, இணை செயலாளர்கள் வழக்கறிஞர்கள் சூர்யா முத்துராமன் சீனியுவராஜ், சுரேஷ் சுரேஷ் விளையாட்டு துறை செயலர்கள் திருகுமரன்,ஞானசேகரன்,கௌதம், நூலகர்கள் வழக்கறிஞர்கள் விக்னேஷ்,கந்தவேல்,லெனின் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானமாக சங்கத்தை முறையாக பதிவு செய்தல்,சங்கத்தின் நிதி வளர்ச்சிக்கு பணியாற்றுதல், சங்க உறுப்பினர்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர்களுக்கு உதவி செய்வது, சங்கத்தின் சிறப்பான செயல்பாடு அறிந்து உறுப்பினர்களாக வருவோரை அதிக அளவில் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி சோழவரம்,மீஞ்சூர்,செங்குன்றம்,ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments