திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் தலைமையில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு ஆனந்த் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கழக துணை பொது செயலாளர் மண்டல பொறுப்பாளருமான முன்னாள் ஒன்றிய அமைச்சர்,நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா திமுக கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன்,கும்மிடிப்பூண்டி தொகுதி பார்வையாளர் கவி கணேசன்,பொன்னேரி தொகுதி பார்வையாளர் சுரேஷ் செல்வராஜ் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்கொள்வது குறித்தும் கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள தேர்தல் நிலவரங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாநில தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் சி.எச்.சேகர்,மாநில அயலக அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின்,மாவட்ட நிர்வாகிகள் அவைத் தலைவர் பகலவன்,மாவட்ட துணை செயலாளர் உமா மகேஸ்வரி,எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் பா.செ. குணசேகரன்..கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மணிபாலன்,கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பரிமளம்,பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர்,எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல்,பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜான் எனும் பொன்னுசாமி,கும்மிடிப்பூண்டி பேரூர் கழக செயலாளர் இரா.அறிவழகன்,ஊத்துக்கோட்டை செயலாளர் அபிராமி குமரவேல்,கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மன்ற தலைவர் சகிலா அறிவழகன்,ஊத்துக்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ரஷீத், அரசு தரப்பு வழக்கறிஞர் எஸ்.சி.பல்லவன் உள்ளிட்ட மாவட்ட,ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.



0 Comments