ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். "ஊழல் இல்லாத இந்தியா --கனவும் நிஜமும்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு வென்ற மூன்றாம் ஆண்டு வேதியியல் துறை மாணவி மோனிஷா, இரண்டாம் பரிசு பெற்ற இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி ரம்யா, மூன்றாம் பரிசு பெற்ற தாவரவியல் துறை மாணவி மோனிகா ஆகியோருக்கு ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி பரிசுகள் வழங்கினர்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தி வரவேற்புரை ஆற்றினார். கோவை மண்டல இணை இயக்குனர் ஜோதிமணி கருத்துரை வழங்கினார். ஈரோடு மாவட்ட தொழில் மையத்தின் உதவி இயக்குனர் ஜெகன்ராஜ் சுய தொழில் வாய்ப்புகள் பற்றி பேசினார். அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளும் மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகள் குறித்து ராதிகா பேசினார். திறன் பயிற்சிக்கான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளை கவிதா வழங்கினார். முப்படைகளில் வேலைவாய்ப்பு குறித்து சாமுவேல் உரையாற்றினார். தன்னார்வ போட்டித் தேர்வு வெற்றியாளர் மகேந்திரன் விளக்க உரையாற்றினர். உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து கல்லூரியின் முதல்வர் சிவக்குமார் உரையாற்றினர். தமிழ்த் துறைப் பேராசிரியர் எண்ணம் மங்களம் பழநிசாமி நன்றியுரை ஆற்றினார். ஜேக்மார்ட்டின், வான்மதி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.






0 Comments