அரியலூர்: உடையார்பாளையத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறை சார்பில் நவீன தொழில் நுட்ப பயிற்சி விவசாய்களுக்கு வழங்கப்பட்டது



அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறையின் மூலமாக கால்நடை பராமரிப்பில் 2025-26 புதிய மற்றும் நவீன தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கல்லடை பராமரிப்பில் புதிய மற்றும் நவீன தொழில்நுட்பம் குறித்த பயிற்சி விவசாய பெருங்குடி மக்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்ட ஆட்சியர்  ரத்னசாமி உத்தரவுபடி மண்டல இணை இயக்குனர் டாக்டர் இராமலிங்கம் வழிகாட்டுதலின் படி உடையார்பாளையம் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கில் துணை இயக்குனர் டாக்டர் முரளிதரன் தலைமையில் கால்நடை பராமரிப்பில் புதிய மற்றும் நவீன தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.



இதில் விவசாய பெருங்குடி மக்களின் பொருளாதாரத்தை இரண்டு மடங்காக மாற்றுவது குறித்தும் பாலினம் பிரிக்கப்பட்ட விந்தணு, தொழில்நுட்பம் குறித்தும், கால்நடைகளின் சுகாதார மற்றும் பராமரிப்பு குறித்தும், தீவனம் மேலாண்மை போன்ற பயிற்சி வகுப்புகளை கால்நடை துறை மற்றும் தீவன அபிவிருத்தியின் டாக்டர் செந்தில்குமார்  எடுத்துரைத்தார்.இந்நிகழ்வில் உடையார் பாளையம் கோட்ட உதவி இயக்குனர்  டாக்டர் ஆனந்தி முன்னிலை வகித்தார்.

பயிற்சியில் 125 பயனாளிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா ஒரு கிலோ தாதுஉப்பு கலவை, ஒரு கிலோ மண்புழு உரம்,தீவன சோள விதைகள் போன்ற இடுபொருள்கள் மற்றும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.


இந்த பயிற்சிக்கான ஏற்பாடு மற்றும் வழிவகைகளை ஜெ. தத்தனூர் டாக்டர் வீரேந்திரன் கங்கைகொண்ட சோழபுரம்  டாக்டர் செல்வம் வானதிரையன்பட்டிணம் டாக்டர் ராமதுரை  மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சுப்பிரமணி ,கங்காசலம், பிச்சை பிள்ளை ஆகியோர் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments