தமிழ்நாடு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று ( 14.02.2026 ) நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் மாநிலத் தலைவர் பால்ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் சிவக்குமார் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட தலைவர் தோழர் விஜயகுமார் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் த.ஸ்ரீதர் துவக்கவுரையாற்றினார். பொதுச்செயலாளர் இரமேஷ் வேலை அறிக்கையையும், மாநில பொருளாளர் அண்ணாமலை நிதிநிலை அறிக்கையையும் முன் வைத்தனர். பிரதிநிதிகள் விவாதங்களுக்கு பிறகு அறிக்கை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாநில தலைவர் புள்ளிஇயல் உதவி இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளதால் இடைக்கால மாநில தலைவராக மாநில துணைத்தலைவர் இராதாகிருஷ்ணன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேனாள் தலைவர் ப.அந்துவன்சேரல் நிறைவுரையாற்றினார்.ஃமாவட்டப் பொருளாளர் பிரியாலெட்சுமி நன்றியுரையாற்றினார். தனி அமைப்புக்கென பறிக்கப்பட்ட புள்ளிஇயல் ஆய்வாளர் பணியிடங்களை பெற துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், திட்டப்பணிகள், கணக்கெடுப்புப் பணிகள் என நெருக்கடிகளுக்கிடையில் களப்பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு தேவையான கால அவகாசம் அளித்திட வேண்டும், விடுமுறை நாட்களில் களப்பணி மேற்கொள்ள வலியுறுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், பயணப்படி, கூடுதல் பொறுப்புப்படி, சிறப்பு கணக்கெடுப்பு பணிகளுக்கு மதிப்பூதியம் உள்ளிட்டவற்றை பெற்று வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


0 Comments