ரெயில்கள் மீது கல்வீசினால் 10 ஆண்டுகள் சிறை..... தெற்கு ரெயில்வே எச்சரிக்கை

 


தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரெயில் மீது கல் வீசுவது போன்ற சட்டவிரோத செயல்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதோடு, ரெயில்வே ஊழியர்களுக்கு ஆபத்தையும், பொதுச்சொத்துகளுக்கு சேதத்தையும், ரெயில் சேவையில் இடையூறுகளையும் ஏற்படுத்துகின்றன. ஓடும் ரெயில் மீது வீசப்படும் கற்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருக்கும் பயணிகள், குழந்தைகள், முதியவர்களுக்கு காயங்களையும், உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ரெயில்வே சட்டம் 1989 பிரிவு 152-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். பிரிவு 154-ன் படி பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.சென்னை கோட்டத்தின் முக்கியமான மற்றும் பதற்றமான பகுதிகளில் ரெயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரெயில்வே போலீசார் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர். குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு கேமரா மற்றும் இதர நவீன கண்காணிப்பு முறைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

ரெயில் தண்டவாளங்களுக்கு அருகில் சந்தே கத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் நடந்தால், பொதுமக்கள் மற்றும் பய ணிகள் உடனடியாக ரெயில்வே உதவி எண் 139-க்கு தொடப்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments