கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அன்னை இந்திரா நகர் பகு தியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் செந்தில்குமார் (39). இவர் சிறு முகை ஆலங்கொம்பு பகுதியில் பழைய துணி வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், காரமடை சிக்காரம்பாளையம் அருகே அன்பு மலர் ஆசிரமத்துக்கு அன்பளிப்பாக வந்த துணிகளில் பயன்படாத துணிக ளைத் தன்னார்வலர்கள் செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளனர். அந்த துணிகளை வாங்கி பிரித்து பார்த்தபோது, ஒரு சேலையின் உள்ளே சிறிய பணப்பை இருந்துள்ளது.
இதில் தங்க நகைகள் இருந்ததால் உட னடியாக எடுத்து வந்து சிறுமுகை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சிறுமுகை காவல் ஆய்வாளர் அம்பிகா தலைமையிலான போலீ ஸார் துணிகள் எங்கிருந்து வாங்கப்பட்டது என விசாரணை நடத்தி னர். அப்போது, சிறுமுகை அறிவு திருக்கோயில் வீதியைச் சேர்ந்த சுந் தர் மனைவி சுதா என்பவரது நகை என்பது தெரியவந்தது. இதைய டுத்து, அந்த நகைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. நகைகளை ஒப்படைத்த செந்தில்குமாரைக் காவல் துறையினர் பாராட்டினர்.

0 Comments