திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சிகப்பு நிற கட்டிடத்தில் 1865 ஆண்டு சார் பதிவாளர் அலுவலகம் துவங்கப்பட்டு 160 ஆண்டுகளாக அதே கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு 2.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக சார் பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பொன்னேரியில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில் சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சாமு.நாசர்,பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், மாவட்டச் செயலாளர் ரமேஷ் ராஜ் பத்திர பதிவுத்துறை டிஐஜி மீரா குமாரி,சார் பதிவாளர் வீரக்குமார் திருவள்ளூர் மாவட்ட தலைவர் இந்திரா ஜூனியர் அசிஸ்டன்ட் வெண்ணிலா மஞ்சுளா புனிதவதி ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
இதில் திமுக நிர்வாகிகள் நகர் மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் நகரச் செயலாளர் ரவிக்குமார் உமாபதி காங்கிரஸ் நிர்வாகிகள் டி எல் எஸ் சிவலிங்கம் பொன்னேரி நகர தலைவர் ஜெய்சங்கர் ஒப்பந்தக்காரர்கள் சந்தானம் ஜோதிஸ்வரன். நகராட்சி கவுன்சிலர்கள். திமுக காங்கிரஸ் நிர்வாகிகள்.மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



0 Comments