கமுதி அருகே மண்டலமாணிக்கம் சுடலைமாடசுவாமி கோவில் மாசிக்களரி திருவிழாவில் 508 திருவிளக்கு பூஜை பெண்கள் கூட்டு வழிபாடு



ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மண்டலமாணிக்கம் க்ஷத்திரிய நாடார்கள் உறவின்முறைக்கு தனித்து புராதன பாத்தியமானஸ்ரீ சுடலை மாடசுவாமிஸ்ரீ மாரியம்மன் கோவில்  மாசிக்களரி மற்றும் பாரிவேட்டை திருவிழா  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

முன்னதாக குண்டாற்றில் புனித நீராடிய பக்தர்கள் தங்களது கைகளில் மஞ்சள் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். அதனைத் தொடர்ந்து மூலவர் சுவாமிகளுக்கு பூஜை பொருள்கள் ஆடை ஆபரணங்கள் சுடலைமாட சுவாமி வேட்டைக்கு செல்லும் பொருள்கள் மீது புனித நீர் தெளித்து சிறப்பு பூஜைகள் தீபாரதணை  நடைபெற்றது. தினமும் காலை இரவு நேரங்களில் மூலவர் சுவாமிகளுக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் பன்னீர் விபூதி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவிய சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் தீபாதாரணைகள்  நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக சுடலைமாட சுவாமி ஆலய வளாகத்தில் நேற்று 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் பஞ்சமுக தீபம் ஏற்றி, கூட்டு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டனர்.  திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் சைவம் மற்றும் அசைவ அன்னதான பிரசாதமாக வழங்கப்பட்டது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மண்டலமாணிக்கம் க்ஷத்திரிய நாடார் உறவின்முறை நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments