திருப்புத்தூரில் அமமுக சார்பில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்..... முன்னாள் அமைச்சர் பங்கேற்பு



சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அண்ணா சிலை அருகில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட செயலாளர் தேர்போகி வி.பாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் ஜெ.பேரவை இணைச் செயலாளர் மருங்கிப்பட்டி ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினரும், திருப்புத்தூர் தொகுதி பொறுப்பாளருமான ஏஎல்.வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

திருப்புத்தூர் நகரச் செயலாளர் அப்துல் ரஹீம் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அமமுக மகளிர் அணி செயலாளரும், ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான வளர்மதி ஜெபராஜ் சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும், சிவகங்கை தொகுதி பொறுப்பாளருமான அன்பரசன், இலக்கிய அணி துணைச் செயலாளரும், காரைக்குடி தொகுதி பொறுப்பாளருமான அம்ச கண்ணன், பொறியாளர் அணி தலைவரும், காரைக்குடி தொகுதி பொறுப்பாளருமான சரவணன், தலைமை கழக பேச்சாளர் கங்கை சக்தி, திருப்புத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், வடக்கு ஒன்றிய செயலாளர் சிவராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவா, மேற்கு ஒன்றிய செயலாளர் கதிர், கல்லல் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசு, சிங்கம்புணரி தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், நகர ஓட்டுநர் அணி தலைவர் கிருஷ்ணகுமார்,  வார்டு செயலாளர்கள் மோகன்தாஸ், எம்.ஆர்.ஆடியோ, நகர ஜெ பேரவை செயலாளர் பழனிக்குமார், பந்தா பாண்டியன் மற்றும் அதிமுக சார்பில் பொதுக்குழு உறுப்பினர் கரு.சிதம்பரம், மாவட்ட பாசறை செயலாளர் பிரபு, ஒன்றிய செயலாளர் முருகேசன், வடிவேலு, முன்னாள் சிங்கம்புணரி ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் நேமம் செல்லப்பாண்டி, பாஜக சார்பில் திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராமேஸ்வரன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவராமன், ஒன்றிய தலைவர் தங்கபாண்டி, அமமுக மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் தொண்டர்கள், பெண்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நகர  செயலாளர் ரஹீம் நன்றியுரை நிகழ்த்தினார்.

Post a Comment

0 Comments