கீழக்கரை பகுதியில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்..... ஒருவர் கைது



இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின் படி, கீழக்கரை உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் குணால் உத்தம் ஷ்ரோதே  அறிவுறுத்தல் படி, கீழக்கரை காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பழைய கஸ்டம்ஸ் சாலையில் அமைந்துள்ள பாழடைந்த கட்டிடத்தில், கீழக்கரை காவல் நிலைய சரித்திர பதிவேடு கொண்ட குற்றவாளி கை (எ) முகமது கான்  32/26 என்ற ரவுடி கஞ்சா விற்பதாக  கீழக்கரை காவல் ஆய்வாளர் பத்மநாபன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,  கீழக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர்  சண்முகவேலு  மற்றும் கீழக்கரை உட்கோட்ட காவலர்கள் பாலமுருகன், சத்தியமூர்த்தி, வசந்தகுமார்,கிரைம் டீம் காவலர்களுடன் சென்று மேற்கண்ட பகுதியில்  மறைந்து இருந்த கை (எ) முகமது கானை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கீழக்கரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைத்தனர், மேலும் இவருடன் தொடர்புடைய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்,

Post a Comment

0 Comments