வேளாங்கண்ணி: டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்,மறியல் போராட்டம் நடைபெற்றது

 


நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் மெயின் ரோட்டில் உள்ள பள்ளி வளாகத்தின் அருகாமையில் டாஸ்மாக் கடையை அகற்ற தமிழக வெற்றி கழகம் சார்பாக நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் மறியல் போராட்டம் நடைபெற்றது.



  தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மாவட்ட பொறுப்பாளர்களும் மகளிர் அணி தலைவிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு வேளாங்கண்ணியில் உள்ள கல்வி நிலையத்தின் அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற முற்றுகைப் போராட்டம் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.



இப் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி காவல்துறையினர்கள் இந்த இடத்தில் உள்ள டாஸ்மார்க் கடையை அகற்றி வேறு ஒரு இடத்திற்கு மாற்றி தருகிறோம் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டன அதனால் அனைவரும் இதற்கு தீர்வு வரும் வரை காத்திருப்போம் என்று அனைவரும் கலைந்து சென்றனர்.


வேளாங்கண்ணி செய்தியாளர் எல்.கலைச் செல்வம்

Post a Comment

0 Comments