கிராம உதவியாளருக்கு காலம் முறை ஊதியம் வழங்கிட கோரி நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை கிராமப் பணியாளர்கள் சங்கம் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்



கிராம உதவியாளருக்கு காலம் முறை ஊதியம் வழங்கிட வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் கல்வித் தகுதியின் பெயரில் வழங்கிட வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு பதவியேற்பு ஐந்தாண்டு கால கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை கிராமப் பணியாளர்கள் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திறல் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



  தமிழ்நாடு வருவாய் கிராம பணியாளர்கள் சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆலோசகர் பி கே சிவக்குமார் தலைமையிலும், தமிழ் மாநில வருவாய் துறை மாவட்ட செயலாளர் சுந்தரவளவன் முன்னிலையிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்   வருவாய் கிராம பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை கண்டனம் முழக்கமிட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் ஜீ.சக்கரவர்த்தி

Post a Comment

0 Comments