ஜெயங்கொண்டம் நகரில் போக்சோ சட்ட விழிப்புணர்வு பேரணியை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்



அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில், வரதராஜன் பேட்டை,மதர் ஞானம்மா  மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் அகில உலக மகளிர் தின விழா”வை முன்னிட்டு போக்சோ (POCSO) சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்திற்கு கல்லூரியின் செயலர் அருள் சகோதரி ஜோசப் ராஜேஸ்வரி  தலைமை தாங்கினார்.இந்த பேரணியை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி கொடி அசைத்து தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.



மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விருந்தினர்களாக  மறைவட்ட முதன்மை குரு அருட்பணி, ஜோசப் கென்னடி ஆகியோர் கலந்து கொண்டு பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சிறப்புகள் குறித்து கருத்துரை வழங்கினர். மற்றும் அருள் சகோதரி. ஆர்த்தி  போக்சோ சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார்.

மேலும், சிறப்பு விருந்தினர்களாக ஜெயங்கொண்டம் துணை காவல் கண்காணிப்பாளர்  தினேஷ்குமார், ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்  நாகவள்ளி, ஜெயங்கொண்டம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலாஜி மற்றும் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை அருள் சகோதரி.அமலா ஃபிளேவியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவிகள் "குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை" எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உயிரோட்டமான வீதி நாடகத்தை நிகழ்த்தினர். 



பேரணி ஊராட்சி அலுவலகம் முன்பாக தொடங்கி ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இப்பேரணியில் 300 பள்ளி மாணவிகள், 400 கல்லூரி மாணவிகள், 30 ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பேரணியின் போது மாணவிகள் குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு கோஷங்களை முழக்கினர். குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் பேரணி சிறப்பாக நடைபெற்றது.

Post a Comment

0 Comments