கீழ்வேளூர் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் கே.சுரேந்தர் அறிவிப்பு.... தனித்து போட்டி என தகவல்

 


மதுரையில் நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நேற்று 21- 03-2026 சனிக்கிழமை இனிதே நடைபெற்றது. கட்சியில் 100  வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தி  2026 சட்டமன்ற தேர்தலுக்காக வேட்பாளர்களை விரைவில் சென்னையில் நடக்கவிருக்கும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தமிழகத்தில் தனித்து போட்டியிட இருக்கும் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் மற்றும் தொகுதி பட்டியல் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்படும் என நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். இந்நிகழ்வில் கீழ்வேளூர் தனித் தொகுதி  வேட்பாளராக கே.சுரேந்தர் போட்டியிடுவார் என தகவல் வெளிவந்துள்ளது.

 நாகை மாவட்ட நிருபர் ஜி.சக்கரவர்த்தி

Post a Comment

0 Comments