சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தம்பிபட்டி பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடமும் அதேபோல் கீழரத வீதியில் புதிய சீரணி அரங்கமும் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற சேர்மன் கோகிலா ராணி, துணைத் தலைவர் கான் முகமது, மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் நாராயணன், மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


0 Comments