இராமநாதபுரம் மேற்கு மாவட்ட எஸ் டி பி ஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி முதுகுளத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
எஸ் டி பி ஐ கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் பாஞ்சுபீர் வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக வனத்துறை அமைச்சர் இராஜ கண்ணப்பன் மற்றும் எஸ் டி பி ஐ கட்சி மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
எஸ் டி பி ஐ கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் கன்சுல் மஹரிபா நிகழ்வுகளை தொகுத்து வழங்கிட மாவட்ட கல்வியாளர் அணி மாவட்ட தலைவர் அண்ணல் முஹம்மது நன்றியுரையாற்றினார். மேலும் எஸ் டி பி ஐ கட்சி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் ராஜா முஹம்மது மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் நோன்பு துறப்பதற்கான முழு ஏற்பாடுகளையும் முதுகுளத்தூர் நகர் தலைவர் காதர் சுல்தான் தலைமையில் நகர் நிர்வாகிகள் சிறப்பாக செய்தருந்தனர்.
அனைத்து சமூக தலைவர்கள் உட்பட 500க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்நிகழ்வு முதுகுளத்தூர் தொகுதி மக்களிடையே சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் மிக முக்கிய நிகழ்வாக திகழ்ந்தது.


0 Comments