திருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மஜா ஜனார்த்தனன் ஏற்பாட்டில் பொன்னேரி திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பி. பலராமன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி மகளிருக்கு வழங்கினார்.
அப்பொழுது மகளிர் அணி நிர்வாகிகள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழக பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி யார் அவர்களை முதலமைச்சராக்குவோம் என்று மகளிர் அனைவரும் சபதம் ஏற்றனர். பின்னர் கழக மகளிர் அணி நிர்வாகிகளிடையே பேசியதாவது:-
ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்தில் பெண்கள் படும் துன்பங்களையும் இந்த ஆட்சியில் அவலங்களையும், திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததையும், பொதுமக்களிடம் எடுத்துக் கூறுங்கள் அது மட்டுமில்லாமல் அதிமுக ஆட்சியில் மகளிருக்கு கொண்டுவரப்பட்ட குடும்பத் தலைவிக்கு மாதம் 2000 ரூபாய், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தப்படும், மானிய விலையில் இரு சக்கர வாகன திட்டம், விலையில்லா ஆடு மாடு கோழி வளர்ப்பு திட்டம், குடும்பத் தலைவிக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்குமாறு மகளிருக்கு அறிவுறுத்தினார். பின்னர் 500க்கும் மேற்பட்ட மகளிருக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட இணை செயலாளர் சுமித்ரா குமார், மகளிர் அணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.



0 Comments