திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. வடகாஞ்சி என்றழைக்கப்படும் எந்த திருக்கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 14நாட்கள் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில் 7ஆம் நாள் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடைபெற உள்ளது. வரலாற்று சிறப்புவாய்ந்த இக்கோவிலின் பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா இன்று கோவில் பரம்பரை அறங்காவலர் டாக்டர் அருண், மற்றும் செயல் அலுவலர் ப.முத்துக்குமார், ஆகியோர் தலைமையில் முன்னாள் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் கே.எஸ். சுப்பிரமணி, மற்றும் ஆன்மீக செம்மல் டாக்டர் எம்.விஜயராவ், ஆகியோர் ஏற்பாட்டில் காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
முன்னதாக விநாயக பெருமானுக்கும் காமாட்சி தாயாருக்கும், ஏகாம்பரநாதர் பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து மேளதாளம் முழங்க வேதமந்திரங்கள் ஓதியபடி பட்டாச்சார்யார்கள் கொடிப்பட்டத்தை கொடி மரத்தில் ஏற்றி வைத்தனர். இதையடுத்து கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தி மகாதீபாராதணை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று எம்பெருமானை தரிசித்து சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத்தலைவர் ப.அலெக்சாண்டர், ஆன்மீக செம்மல் சிவனடியார் ஏ.ஆர். விஸ்வநாதன், மீ.வி. கோதண்டம், ஹேமச்சந்திர ரெட்டி, ஜானகிரமா ரெட்டி, மீஞ்சூர் அதிமுக பட்டாபிராமன், கதிர்வேலு, மற்றும் முக்கிய நிர்வாகிகள், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.



0 Comments