காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்



திருச்சி துலுக்கப்பட்டி சேர்ந்த மகிமா(20) இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாடிக்கொம்பு அருகே உள்ள உண்டாரபட்டியில் உறவினர் வீட்டிற்கு திருவிழாவிற்கு வரும்பொழுது உண்டாரபட்டி சேர்ந்த பைக் மெக்கானிக் மாரிமுத்து(21) என்பவருடன் காதல் மலர்ந்தது. இதுகுறித்து மகிமா வீட்டிற்கு  தெரிந்ததால் கண்டித்தனர்.

இந்நிலையில் இருவரும் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வேடசந்தூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

வேடசந்தூர் காவல் நிலை ஆய்வாளர் கணேசன்மூர்த்தி தலைமையிலான போலீசார் இரு வீட்டு பெற்றோரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார் இதில் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போலீசார் இருவருக்கும் எந்த இடையூறும் செய்யக்கூடாது என்று பெண் வீட்டாரிடம் எழுதி வாங்கி இருவரையும் மணமகன் வீட்டாருடன் அனுப்பி வைத்தனர்.

Post a Comment

0 Comments