தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்..... புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு கலெக்டர் அருணா ஐஏஎஸ் முக்கிய அறிவிப்பு

 


தமிழக சட்டமன்ற தேர்தல்-2026 அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று (15.03.2026) முதல் அமலுக்கு வந்ததையொட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மற்றும் மாதந்தோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகியவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் வரை நடைபெறாது. பொதுமக்கள் தங்களின் மனுக்களை அளிக்க வசதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்களை அளிக்க வரும் பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட மனு பெட்டியில் தங்களது மனுக்களை செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments