ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் பகுதியில் உள்ள மார்னிங் ஸ்டார் மகளிர் கலைக் கல்லூரியில் நேற்று தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வாக்காளர் வாக்களிப்பதன் அவசியம், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை போன்ற வாசகங்களை எழுதியும், கோஷமிட்டும் சென்றனர். முன்னதாக வாக்காளரின் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அமலி ஆரோக்கிய செல்வி, தேர்தல்துணை வட்டாட்சியர் லலிதா, உதவி திட்ட அலுவலர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார இயக்க மேலாளர் மயில்ராஜ்,துணை வட்டாட்சியர் கீதா, வருவாய் ஆய்வாளர்கள் சதீஸ்குமார், பூர்ணிமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சிவகுமரன், மாரிமுத்து, பில்லத்தியான், சாந்தி, அன்னைதெரசா வீரலட்சுமி, பாலஅமுதா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


0 Comments