ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று திடீரென தாக்குதலை தொடங்கி உள்ளன. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தீவிர போர் மூண்டுள்ளது.இதனால் அந்த பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.எனவே இந்த பகுதிகளில் வசிக்கும் இந்திய மக்களுக்கு மத்திய அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்து உள்ளது.இந்தநிலையில், துபாய் விமான நிலையத்திற்கு அருகிலேயே ஏவுகணை தாக்குதல் நடந்தது. தொடர் தாக்குதல்களால் அசாதாரண் சூழல் நிலவுகிறது.விமான நிலைய அதிகாரிகளின் முயற்சியால் நாங்கள் இப்போது பாதுகாப்பாக இருக்கிறோம். மேலும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளோம் என எக்ஸ் தளத்தில் பி.வி.சிந்து குறிப்பிட்டுள்ளார்.

0 Comments