திருக்குவளை அருகே சியாமளாதேவி மாரியம்மன் ஆலய பங்குனி திருவிழா



நாகை மாவட்டம் திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட கீழநாட்டிருப்பில் உள்ள சியாமளாதேவி மாரியம்மன் மற்றும் வீரமா காளியம்மன் கோவில்களின் ஆண்டு தோறும் நடைபெறும் பங்குனி பெருவிழா நேற்று வெகு விமர்சையாக தொடங்கியது.

விழாவின் முதல் நாளான நேற்று காலை, பாரம்பரிய முறையில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்தனர். 



தொடர்ந்து மாலை நேரத்தில், அலங்கரிக்கப்பட்ட அம்மன் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீடுகள் தோறும் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.

இந்த பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் தீமிதி திருவிழா வருகிற மார்ச் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற உள்ளனர்.



பெருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விழா நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments