ஆண்டிமடத்தில் வரதராஜன்பேட்டை மாதர் ஞானம்மா மகளிர் கல்லூரி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது


அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் வரதராஜன் பேட்டையில் அமைந்துள்ள மதர் ஞானம்மா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் போதை ஒழிப்பு அமைப்பின் சார்பில் “போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி” சிறப்பாக நடைபெற்றது.



இப்பேரணிக்கு கல்லூரியின் செயலர் அருள் சகோதரி ஜோசப் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். ஆண்டிமடம் காவல் நிலைய காவல் ஆய்வாளர்  நடராஜன்  முன்னிலை வகித்தார். திருச்சி நகரில் உள்ள நாகு மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ்  சிறப்புரையாற்றி, போதைப்பொருள்களின் உடல் மற்றும் மனநல பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



பேரணியில் மாணவிகள் “போதை ஒழிப்பு விழிப்புணர்வு” குறித்த வீதி நாடகத்தை நடித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர். மேலும், போதைப்பொருள் பழக்கத்தின் தீமைகள் குறித்து கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பேரணியைச் சிறப்பித்தனர். போதை இல்லா சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற உறுதிமொழியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

Post a Comment

0 Comments