ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகன சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மலட்டாறு கிழக்கு கடற்கரை சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கணேசன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.54,000 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் காலத்தை முன்னிட்டு அதுவும் அமைச்சர் தொகுதி என்பதால் 24 மணி நேரமும் சாயல்குடியை சுற்றி இ சி ஆர் ரோட்டில் கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆவணமின்றி பணம் எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் மீது அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 Comments