நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாவீரன் பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இரத்ததான முகாம் ஒன்றிய செயலாளர் ஏ.பி மதியழகன் தலைமையிலும், மாவட்ட தலைவர் எம்.ஜோதிபாசு முன்னிலையிலும் இன்று நடைப்பெற்றது. ஆண்டு தோறும் 100 யூனிட் ரத்தம் நன்கொடையாக வழங்கப்பட்டு வருகிறது. 30க்கும் மேற்ப்பட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் இரத்தம் தானம் செய்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் அருள்தாஸ், மாவட்ட பொருளாளர் இ.எம் பிரகாஷ், நாகை தெற்கு ஒன்றிய தலைவர் எஸ்.சதீஸ்குமார், முன்னாள் டி.ஒய்.எஃப்.ஐ .மாவட்ட செயலாளர் ஏ.வடிவேல், எஸ்.எஃ ப் .ஐ மாவட்ட செயலாளர் எம்.முகேஷ்கண்ணன், முன்னாள் டி.ஒய்.எஃப்.ஐ நகர செயலாளர் கே.வெங்கடேசன் மற்றும் டி.ஒய்.எஃப்.ஐ நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இரத்ததானம் செய்த அனைவருக்கும் மருத்துவகல்லூரி மருத்துவனை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.







0 Comments