தேனி மாவட்டம், குன்னூர் பகுதியில் விவசாயிகளின் நலன் கருதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் (DPC) இன்று முறைப்படி பூஜையுடன் திறந்து வைக்கப்பட்டது.
இந்தத் தொடக்க விழாவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கொள்முதல் அலுவலர் அஞ்சுகம் முன்னிலை வகித்தார். உடன் பட்டியல் எழுத்தர் ஜெயந்தி, விவசாய சங்க பிரதிநிதி கண்ணன், காவலாளி புவனேஷ் மற்றும் துறை சார்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதன் மூலம், குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நெல் விளைச்சலை இடைத்தரகர்கள் இன்றி, அரசு நிர்ணயம் செய்துள்ள லாபகரமான விலைக்கு நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயப் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


0 Comments