டைட்டானிக் படத்தின் போஸில் டொனால்டு டிரம்ப் - எப்ஸ்டீன் சிலை

 


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் ஆகியோரின் உருவங்களைக் கொண்ட ஒரு சிலை நிறுவல் வாஷிங்டன், டிசி நகரில் உள்ள நேஷனல் மாலில் வைக்கப்பட்டுள்ளது. இதை அங்குள்ள 'சீக்ரெட் ஹேண்டஷேக்' எனும் கலைஞர் குழுவினர் நிறுவி உள்ளனர்.எப்ஸ்டீன் விவகாரம் குறித்து டொனால்டு டிரம்ப் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், எப்ஸ்டீனுடன் இருப்பதை போன்று வைக்கப்பட்டிருக்கும் சிலை, சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.சமீபத்தில் எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை அமெரிக்க அரசு வெளியிட்டது. 

இதில் டிரம்ப் சிக்கலை சந்தித்தார். அதாவது, இந்த ஆவணங்களில் டிரம்ப் உட்பட ஏராளமான முக்கிய புள்ளிகளின் பெயர்களும் அடிபட்டன. தனக்கும் எப்ஸ்டீனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று டிரம்ப் மறுத்தாலும், எப்ஸ்டீனுடன் இருக்கும் வீடியோக்கள், டிரம்பின் மறுப்பை சந்தேகத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. இப்படி இருக்கையில், எப்ஸ்டீனுடன் டிரம்ப் கடிப்பிடித்து இருப்பதை போன்ற சிலை ஒன்று வாஷிங்டன் நகரத்தின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கிறது.

பலரும் இந்த சிலையை வந்து பார்த்து, அதனுடன் செல்பி எடுத்து செல்கிறார்கள். மற்ற நாடுகளில், குறிப்பாக பிரிட்டனில் எப்ஸ்டீனுடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக இங்கிலாந்து முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தார் என்று தெரிய வந்ததும் அவர் கைது செய்யப்பட்டார். இப்படியாக மற்ற நாடுகளில் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

டைட்டானிக் படத்தில், கேளிக்கை விருந்துகளுக்கு மத்தியில் ஜாக்கும், ரோசும் தங்கள் காதலை வளர்த்தைப்போல் டிரம்பும், எப்ஸ்டீனும் இணை பிரியாமல் இருந்ததாக சிலைக்கு கீழ் பொறிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments