ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த கொத்தபூக்குளம் மரக்குளம் புதுப்பட்டி மண்டலமாணிக்கம் பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது இந்நிலையில் நேற்று வலையபூக்குளம் கிராமத்தை சேர்ந்த சுப்பு மனைவி முத்துலட்சுமி (55) இவர் கமுதியில் இருந்து பேரூந்தில் சென்று மரக்குளம் பஸ்ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து வலையபூக்குளம் செல்லும் சாலையில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார் அப்போது கறுவேலங்காட்டு பகுதியிலிருந்து ஒடி வந்த காட்டுப்பன்றி முத்துலட்சுமியை தாக்கியது இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் பின்னர் கமுதி தனியார் மருத்துவமனையில் முத்துலட்சுமி சேர்க்கப்பட்டுள்ளார் இதுகுறித்து கமுதி வருவாய்துறையினர் விசாரிக்கின்றனர்.

0 Comments