சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கரடி கருப்பர் கோவில் வீடு மஹா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஒடுவன் பட்டியில்  அருள்பாலிக்கும் ஸ்ரீ கரடி கருப்பர் கோவில் வீடு மஹா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ஒடுவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 12 ஆலயங்களுக்குள் கட்டுப்பட்ட  பழமையான ஸ்ரீ கரடி கருப்பர் கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும் இக்கோவில் வீடு மஹா கும்பாபிஷேம் இன்று நடைபெற்றது.முன்னதாக சனிக்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜை,ஸ்ரீ மஹாகணபதி ஹோமம்,வாஸ்து சாந்தி,கும்ப அலங்காரம்  உள்ளிட்ட பூஜைகளுடன் முதல்கால பூஜைகள் துவங்கி பூர்ணாகுதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதலுடன் முடிவுற்றது. 

இன்று திங்கட்கிழமை காலை மங்கள இசை,   கோ பூஜையுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜை துவங்கி திரவ்யாகுதி, ஸ்ரீ மஹா பூர்ணாகுதி, தீபாராதனையுடன் புனிதநீர் கலசங்கள் புறப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்தனர் அங்கு சிவாச்சாரியார்கள் குழு வேதமந்திரங்கள் முழங்க கருப்பர் கோவில் வீடு  மூலஸ்தானத்திற்கு உள்ள வேல் மற்றும் அரிவாள் போன்றவைகளுக்கு புனித நீர் ஊற்றி மஹா  கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் சேர்வைக்காரன் பட்டி, அம்பலக்காரன் பட்டி, மேட்டுப்பட்டி, பிரான்மலை, புதுப்பட்டி, சுற்றுட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

Post a Comment

0 Comments