ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட பல லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் மற்றும் இந்திய ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், கருமொழி சோதனைச் சாவடி பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் ஹரிஹரசுதன் தலைமையிலான குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில் சார்பு ஆய்வாளர் கலா, தலைமை காவலர்கள் கார்த்திக்குமார், மடோனா ஜோசி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, காரில் வந்த ராமநாதபுரம் சித்தார்கோட்டையைச் சேர்ந்த முகம்மது பாசில் என்பவரிடம் கணக்கில் வராத பணம் இருப்பது கண்டறியப்பட்டது.
அவரிடமிருந்து 10,000 மலேசிய ரிங்கிட் மற்றும் 52,000 இந்திய ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தி வரப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அந்தப் பணம் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை இத்தொகுதியில் மட்டும் மொத்தம் 15,927 மலேசிய ரிங்கிட் மற்றும் 468 சிங்கப்பூர் டாலர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments