பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கல்லூரியில் முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் மாணவிகள் ரங்கோலி கோலமிட்டு வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர்

 


ராமநாதபுரம் மாவட்டம், கமுதி -கோட்டைமேடு பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரியில் நேற்று நேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் மாணவ, மாணவிகள்  500க்கும் மேற்பட்டோர் ரங்கோலி கோலமிட்டு வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் மூலம் நடைபெற்ற இந்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணிக்கு மகளிர் திட்ட இயக்குனர் பாபு, கல்லூரி முதல்வர் தர்மர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

உதவி திட்ட அலுவலர் ஜெயபிரகாஷ், ஒருங்கிணைப்பு அலுவலர் பேராசிரியர் வாகை பாண்டியன், வட்டார இயக்க மேலாளர் மயில்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் பேராசிரியர்கள் சரவணகுமார்,மேரிசுஜின், கஜேந்திரநாயகம் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சிவகுமரன், மாரிமுத்து,பில்லத்தியான், சாந்தி, அன்னை தெரசா, வீரலெட்சுமி, பாலஅமுதாஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னதாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் மாணவ,மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி, கோஷமிட்டு கல்லூரியில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தனர். மேலும்வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழியில், வாக்களிப்பதன் அவசியம், 100 சதவீதம் வாக்களிப்பது அவசியம், வாக்களிப்பது ஜனநாயக கடமை போன்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Post a Comment

0 Comments