சாயல்குடி அருகே நரிப்பையூரில் தவெக தெருமுனை பிரச்சாரம்

 


தவெக தலைவர் விஜய் ஆணைக்கிணங்க,தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழகசெயலாளர் எம்.ஆர்.மதன்  தலைமையில்,சாயல்குடி தெற்கு  ஒன்றியச் செயலாளர் . மணிகண்டன்  முன்னிலையில் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாயல்குடி தெற்கு ஒன்றியம் நரிப்பையூர் ஊராட்சியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



 இந்த பிரசாரத்தில் தமிழகத்தில் நடக்கும் மகளிர் மற்றும் சிறு பெண் குழந்தைகளுக்கு எதிராக வன் கொடுமைகளை பற்றி யும் மது'வினால் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை அழிந்து போவதை கண்டித்தும், நரிப்பையூர் ஊராட்சிக்கு தேவையான மருத்துவமனை,உயர்கல்வி பள்ளிக்கூடங்கள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை எனபதை பற்றியும் மாவட்டச் செயலாளர் மதன் பேசினார் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளும்  பேசினார்கள் மேலும் இராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் மதன் கழக வெற்றிச் சின்னமாக விசில் சின்னத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் தேர்தல் பரப்புரை செய்து வாக்குகள் சேகரிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments