கீழையூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு வினாடி வினா போட்டி


நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வெண்மனச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைஞாயிறு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ஏ.பி. பாலசுப்பிரமணியம்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தீ விபத்துகளைத் தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் வீட்டில் மற்றும் பள்ளிகளில் ஏற்படக்கூடிய தீ விபத்துகளை எவ்வாறு தடுப்பது, தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கும் விதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தீயணைப்பு வீரர்கள் மாணவர்களுக்கு விரிவாக விளக்கமளித்தனர்.மேலும் மாணவர்களின் அறிவை மேம்படுத்தும் வகையில் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, சிறப்பாக பதிலளித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்




Post a Comment

0 Comments