திருக்குவளை அருகே சித்ரா பௌர்ணமி விழா..... 10 வயது சிறுவன் நாதஸ்வரம் வாசித்து அசத்தல்.....


 நாகை மாவட்டம் திருக்குவளை அருகே  முருகனின் ஆதிபடைவீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி பெருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு 10 வயது சிறுவன் நாதஸ்வரம் வாசித்து  அசத்திய நிகழ்வு பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.



இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.விழாவின் 3ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு  வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மலர் அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றதை தொடர்ந்து, வீதியுலாவில் பக்தர்கள் வீடு தோறும் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.



இந்நிகழ்வில் நாதஸ்வர இசை நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. குறிப்பாக, பிரபல நாதஸ்வர வித்துவான் டி.ஆர்.பி. அருள்மொழிகார்த்திக்-யின் 10 வயது மகன் ராகசுகிர்தன், தந்தையுடன் இணைந்து நாதஸ்வரம் வாசித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். சிறுவயதிலேயே இசை மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டு நாதஸ்வரம் பயிலும் இந்த சிறுவனின் திறமை, பக்தர்களை மெய்மறக்கச் செய்து பாராட்டுகளை பெற்றது.கர்நாடக இசைப் பயிற்சியும் பெற்று வரும் ராகசுகிர்தன் வழங்கிய இனிய நாதஸ்வர இசை, விழாவுக்கு தனித்துவமான மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.விழாவிற்கான உபய ஏற்பாடுகளை தென் சோழ மண்டல இசைக் கலைஞர்கள் செய்திருந்தனர்.

திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments