எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவில் சித்ரா பௌர்ணமி விழா தேரோட்டம் மற்றும் 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம்..... முன்னேற்பாடு குறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு.....


முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வித வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் வாழ்த்து வருகிறார்.. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ளது. 

தேரோட்டத்தை தொடர்ந்து 56 மணி நேரம் இடைவிடாத பாலாபிஷேகம் மற்றும் ரத காவடி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதனை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் வசதி ஏற்பாடுகளை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

பக்தர்களின் அதிகமான வருகையை கருத்தில் கொண்டு தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பக்தர்கள்  சிரமமின்றி தரிசனம் செய்ய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்த ஆய்வின்போது வேளாங்கண்ணி துணை காவல் கண்காணிப்பாளர் நிக்சன், திருக்குவளை காவல் ஆய்வாளர் சங்கீதா, கோயில் செயல் அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments