நாகை மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பிரதீப்.வி. கிருஷ்ணகுமார் உத்தரவின் பேரிலும், திருப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் விஜயகுமார் ஆலோசனைப்படி, மலேரியா காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமிற்கு மனோஜ் தலைமை வகித்தார்.இம்முகாமில் மலேரியா நோய் தடுப்பு முறைகள் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், அது தொடர்பான உறுதிமொழி எடுக்கப்பட்டது.மேலும், மலேரியா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் களப்பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மலேரியா போன்ற கொசு மூலம் பரவும் நோய்களைத் தடுக்க சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்தல் அவசியம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் எஸ்.மோகன் செய்திருந்தார்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

0 Comments