திருக்குவளை அருகே அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணி சுவாமி கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழா..... சுகாதார முன்னேற்பாடு ஆய்வு



திருக்குவளை முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி  ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு, பொது சுகாதாரத் துறையின் முன்னேற்பாடு பணிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார அலுவலர்  பிரதீப்.வி.கிருஷ்ணகுமார்  உத்தரவின்படி, வட்டார மருத்துவ அலுவலர் விஜயகுமார் ஆலோசனையில் பேரில், சுகாதார தூய்மைப் பணிகள், நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்தல், குளோரின் கலந்த பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இடங்கள், தற்காலிக கழிப்பறைகள் அமைக்கும் பணிகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. மேலும் மருத்துவ முகாம் அமைக்கப்படும் இடங்கள், அன்னதான கூடங்களின் சுகாதார நிலை மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.



அத்துடன் எட்டுக்குடி மற்றும் திருக்குவளை ஊராட்சி பகுதிகளில் உள்ள மேல்நிலை மற்றும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளும் பரிசோதிக்கப்பட்டன.

இந்த ஆய்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் சி.செந்தில்குமார், கே. ரகுநாதன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் எஸ். மோகன், அருளானந்தம், ராஜு, சுபாஷ், குணசீலன், அருண்மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments