ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் தமிழக்ததில் மிகவும் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றான அருள்மிகு பாகம்பிரியாள் சமேத வல்மீகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செவ்வாய் வெள்ளி கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு இன்று கொடியேற்றத்துடன் சித்திரை பௌர்ணமி திருவிழா தொடங்கியது.
முன்னதாக கொடிமரத்துக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. ஒவவோர் நாளும் ஸ்ரீ பாகம்பரியாள் சமேத வல்மீகநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதகைள் நடைபெறும். சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அதனை தொடர்ந்து தேரோட்டம் ,திருக்கல்யாணம், பூச்செரிதல் விழா உள்ளிட்டவை அதில் விமர்சையாக நடைபெறும். இன்று நடைபெற்ற கொடியேற்றத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு அலங்காரத்தில் தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் ஏராளமான கலந்து கொண்டு அருள் பெற்று சென்றனர்.


0 Comments