திருவாடானை சட்டமன்ற தொகுதி அதிமுகவேட்பாளர் கீர்த்திகாமுனியசாமி திருவாடானை வடக்கு ஒன்றியம் மற்றும் ஆர்.எஸ்.மங்களம் பேரூராட்சி பகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து எழுச்சிமிகு பிரச்சாரம் மேற்கொண்டார்.
மூன்று தலைமுறைகளாக இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தும், எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட இதுவரை நிறைவேற்றித் தரவில்லை" என மக்கள் தங்கள் வேதனையைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த அவலநிலை மாறவும், உங்கள் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படவும் வருகின்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு அளிக்குமாறு பொதுமக்களிடம் வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி கேட்டுக் கொண்டார். மக்களின் பேராதரவுடன் இரட்டை இலை வெல்லும் திருவாடானைதொகுதி இனி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்!
திருவாடானை தொகுதி மக்களின் குடிநீர் பற்றாக்குறையை நிரந்தரமாகப் போக்குவதே எனது தலையாய பணியாக எடுத்து செயல்படுவேன் என மக்களிடம் கூறி வாக்குகளை சேகரித்தார்.

0 Comments