திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வெள்ளம்பாக்கம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராதாருக்மணி ஸ்ரீ வேணுகோபால் பெருமாள் திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா அக்கிராமத்தில் ஞாயிறன்று சிறப்பாக நடைபெற்றது, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கணபதி ஓமத்துடன் துவங்கிய விழாவானது ஒவ்வொரு நாளும் பகவான் ஸ்ரீ வேணுகோபால் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
புங்கம்பேடு புனிதபுரி உ. வே.சுதச்சானசாரியார் முன்னிலையில் நேற்று காலையில் கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் பஞ்சலோகாதிபதிகளின் சிறப்பு பூஜையுடன் துவங்கி கும்பநீர் கலசத்துடன் கிராம மக்கள் ஆலயத்தை சுற்றி வந்து விமான கோபுரத்தின் மீது பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரினை கொண்டு பட்டாச்சாரியார்கள் கோபுர கலசங்கள் மீது ஊற்றி வழிபாடு செய்து பொதுமக்களின் மீது தெளித்தனர் இதில் நனைந்தவாறு கோவிந்தா, கோவிந்தா, என்ற கோஷங்களுடன் கிராம மக்கள் பகவான் ஸ்ரீ ராதாருக்மணி ஸ்ரீ வேணுகோபால் பெருமாளை தரிசனம் செய்தனர், இதனைக் காண சுற்று வட்டார பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர் அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது, விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் விழாக் குழுவினர் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.


0 Comments