டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் யார்.? விரிவான தகவல்கள்

 


டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். மேலும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில், அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 25 அன்று இரவு 8:30 மணியளவில் வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (White House Correspondents’ Association) இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.அந்த நேரத்தில் மேடையில் இருந்த அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோரை சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்தச் சம்பவத்தில் டிரம்ப் தம்பதியருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. டொனால்ட் டிரம்பை குறி வைத்து நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர் உயிருடன் பிடிபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அந்த நபர் யார் என்பது குறித்த அதிர்ச்சிகரமான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர், கலிபோர்னியாவின் டொரன்ஸ் நகரைச் சேர்ந்த 31 வயதான கோல் தாமஸ் ஆலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று நியூயார்க் போஸ்ட் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அடையாளத்தை கூட்டாட்சி சட்ட அமலாக்க அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.

அவர் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். நிறுவனத்தில் இன்ஜினியராகவும், பகுதி நேர ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். மேலும் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சிறந்த ஆசிரியருக்கான விருதைப் பெற்றிருக்கிறார். நாசாவிலும் பயிற்சி பெற்று வந்துள்ளார்.கடந்த 2024-ம் ஆண்டு கமலா ஹாரிஸ்க்கு நன்கொடை அளித்துள்ளார் என தகவல்கள் வெளியாக உள்ளது.

பாதுகாப்புத் துறை அதிகாரி கேஷ் பட்டேல் கூறுகையில், “இந்தச் சம்பவம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகிறோம். அவர் துப்பாக்கி, கத்திகளுடன் இருந்தார். குண்டு துளைக்காத கவச உடையும் அணிந்திருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.எனினும், தாக்குதலின் நோக்கம் என்ன என்பது அல்லது அவர் யாரை குறி வைத்தார் என்பது குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்று அமெரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஆலன் மீது கூட்டாட்சி அதிகாரியைத் தாக்கியது மற்றும் வன்முறைக்குத் துப்பாக்கியைப் பயன்படுத்தியது போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்.பி.ஐ மற்றும் சீக்ரெட் சர்வீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.

Post a Comment

0 Comments