கும்மிடிப்பூண்டி தாலுக்கா சுவரப்பேட்டை அடுத்த ஐயர் கண்டிகை பகுதியில் உள்ள வெங்கைய சவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா கவரப்பேட்டை அடுத்த ஐயர் கண்டிகை பகுதியில் புகழ் பெற்ற ஸ்ரீ வெங்கைய சுவாமி ஆலயம், அருள்மிகு ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர், பால முருகர் மற்றும் ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் தற்போது சில மராமத்து பணிகள் மேற்கொண்டு கடந்த இரு தினங்களாக பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று நேற்று காலை 9மணி முதல் 10.30 மணிக்குள்ளாக மஹா கடந்த கும்பாபிஷேகம் நடைபெற்றது.இக்கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளான வி. சரஸ்வதி வடிவேல், வி.அருண், வி.தினேஷ் குமார், மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



0 Comments