நாகை அருகே பசிக்கிடைவெளி அதீன மழையனார் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்..... திரளான பக்தர்கள் பங்கேற்பு


நாகை மாவட்டம் திருக்குவளை அருகேயுள்ள பசிக்கிடைவெளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூர்ண ஸ்ரீ புஷ்கலா சமேத அதீன மழையனார் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.



இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி ஶ்ரீ விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல் கால யாக சாலை பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து இன்று காலை நடைபெற்ற இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஒலிக்க கோபுரக் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments